தலைநகர் சென்னையில் வீடுகள், பல்வேறு நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் கட்டடங்களில் டெங்கு பரவக் காரணமாக இருக்கும் ஏடிஸ் வகை கொசுக்கள் உருவாகாத வகையில், நன்னீரைத் தேங்க விடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்காக விழிப்புணர்வு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இன்னும் 48 மணி நேரத்தில் அத்தகைய பொருட்களை நீக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யா விட்டால் பொது சுகாதாரத் துறை அத்தியாவசிய சட்டத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களும் நீக்கி விடுவதாக உறுதியளித்துள்ளனர்.