வரும் 23 -ஆம் தேதி நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பைப் பொறுத்து உயர்மட்டக்குழு கூடி அடுத்தகட்ட முடிவை அறிவிக்கும் என்றார் ஜாக்டோ - ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் க. மீனாட்சிசுந்தரம்.
புதுக்கோட்டை அரசு பொது வளாகத்தில் தமிழக அரசின் ஊதிய மாற்றமும், ஏமாற்றமும் என்ற தலைப்பில் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் விளக்கக்கூட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், போலீஸார் அனுமதி மறுத்ததால், அரசு பொது வளாகத்திற்கு வெளியே ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கி. நாகராஜன் தலைமையில் விளக்கக் கூட்டம் நடத்தினர்.
இதில் கலந்து கொண்ட அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச்செயலருமான க. மீனாட்சிசுந்தரம் அளித்த பேட்டி:
தமிழக அரசு தொடர்ந்து தங்களை வஞ்சித்து வருவதால், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பாதிக்கபட்டுள்ளனர். நீதிமன்ற வேண்டுகளுக்கிணங்கவே கடந்த முறை போராட்டத்தைக் கைவிட்டோம். 7 ஆவது ஊதியக்குழுவில் எங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. வரும் 23 -ஆம் தேதி நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை பொறுத்து 24 -ஆம் தேதி சென்னையில் உயர்மட்டக்குழு கூட்டம் கூடி அடுத்தகட்ட முடிவை அறிவிக்கும். நீதீமன்ற தீர்ப்பு சாதகமாக அமையாவிட்டால் அடுத்தகட்டப் போராட்டம் மிகவும் கடுமையாக இருக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.