திருவள்ளூர் அருகே பொதுமக்களின் முதலீடு பணம் ரூ.3.34 லட்சத்தை கையாடல் செய்ததாக தனியார் நிதி நிறுவன மேலாளரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகம் காக்களூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் ஏலச்சீட்டு, நிதி வைப்புத் தொகைப் பெற்று, அதற்கு வட்டியுடன் பணம் வழங்குதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிதி நிறுவனத்தில் ஊத்துக்கோட்டையை அடுத்த, வேலகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவப்பிரகாசம் (40) பங்குதாரராகவும், அதனை நிர்வகிக்கும் மேலாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் நிதி நிறுவனத்தின் கணக்கை சரிபார்த்தபோது, ரூ.3.34 லட்சத்தை சிவப்பிரகாசம் கையாடல் செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரான சென்னையைச் சேர்ந்த நவீன், திருவள்ளூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து, சிவப்பிரகாசத்தை வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.