டாக்டர் கிருஷ்ணசாமியின் மகளுக்கு மருத்துவ சீட்டு கிடைத்தது இப்படித்தானா? சமூக வலைத்தளத்தில் பரவும் தகவல்

அனிதாவின் தற்கொலை குறித்து எதிர்மறையான கருத்துக் கூறியிருந்த கிருஷ்ணசாமியின் மகளுக்கு, மருத்துவ சீட்டு கிடைத்தது தொடர்பான ஒரு தகவல் சமூக தளத்தில் பரவிவருகிறது.
டாக்டர் கிருஷ்ணசாமியின் மகளுக்கு மருத்துவ சீட்டு கிடைத்தது இப்படித்தானா? சமூக வலைத்தளத்தில் பரவும் தகவல்
Published on
Updated on
1 min read


சென்னை: அனிதாவின் தற்கொலை குறித்து எதிர்மறையான கருத்துக் கூறியிருந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகளுக்கு, முதல்வரின் பரிந்துரையால்தான் மருத்துவ சீட்டு கிடைத்ததாக ஒரு தகவல் சமூக தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

அதாவது கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பால பாரதி, இது குறித்து சட்டப்பேரவையில் நடந்த ஒரு உரையாடலை தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாகவும், அதில் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகளுக்கு, முதல்வர் பரிந்துரை செய்தே எம்பிபிஎஸ் இடம் கிடைத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனை ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.
 

அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, 
சட்டமன்றத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசிக்கொண்டிருந்தபோது அமைச்சர் ஒருவர் எழுந்து உங்கள் மகளுக்கு போதிய மதிப்பெண்கள் இல்லாதபோதும் முதலமைச்சரிடம் வந்து மெடிக்கலில் சேர உதவி கேட்டீர்கள்.

அடுத்த நிமிடமே அம்மா அவர்கள் மெடிக்கல் ஷீட் கொடுத்தாரே மறந்துவிட்டீர்களா எனக்கேட்க அப்போது கிருஷணசாமி நான் மறக்கவில்லை. அதற்காக இப்போதும் நன்றி கூறுகிறேன் எனக்கூறி முதலமைச்சரைப்பார்த்து வணக்கம்போட இந்த வணக்கத்தை வேறு எங்காவது போடு என்பதுபோல் வெடுக்கென்று முதலமைச்சர் முகத்தை திருப்பிக்கொள்ள.. டாக்டர் கிருஷ்ணசாமியின் சுயநலம் அப்போது சட்டமன்றத்தின் மேஜையில் அமர்ந்து சிரித்தது.

இப்படி புறவாசல்வழியாக உதவியைப்பெற்றுக்கொண்டவர் தம்மகளுக்கு ஒருநீதி அனிதாவுக்கு இன்னொரு நீதி என முழங்கி வருகிறார். தோழர் பிரின்சு, எம்எல்ஏ சிவசங்கர் மீது குற்றம் சுமத்துகிறார், பாஜக, அதிமுக வேடிக்கை பார்க்கிறார்கள். ஊடகங்கள் இந்த நியாயவாதியாரைத் தேடிப்பிடித்து அவர் கருத்தைக் கேட்கிறார்களாம். கேப்பையில நெய்வடியுதாம் என்று பதிவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒரு தலித் மாணவி, கடும் போராட்டத்துக்குப் பின் தனது மருத்துவர் கனவு கலைந்ததால், மன விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலையால் தமிழகமே அமைதி இழந்தது. ஆனால், அவரது மரணத்துக்குப் பின்னால் சிலர் இருப்பதாக, அரசியல் ரீதியான கருத்துகளைக் கூறியதால், கிருஷ்ணசாமிக்கு எதிராக சமூக தளங்களில் ஏராளமானோர் கடும் விமரிசனைத்தை பதிவு செய்து வந்தனர்.

இந்த நிலையில், எளிமைக்கு உதாரணமாகக் கூறப்படும் முன்னாள் எம்எல்ஏ பால பாரதி தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருப்பதாகக் கூறப்படும் இந்த கருத்து, அவருக்கு எதிராக மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com