2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி எம்.எல்.ஏ வெற்றிவேல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

வரும் 12-ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுகவின் பொதுக்குழுவினை கூட்டுவதற்கு தடை விதிக்க கோரி, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏவான வெற்றிவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

News image
Updated On :8 செப்டம்பர் 2017, 12:36 pm

DIN

சென்னை: வரும் 12-ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுகவின் பொதுக்குழுவினை கூட்டுவதற்கு தடை விதிக்க கோரி, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏவான வெற்றிவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதிமுகவில் முதல்வர் பழனிசாமி மற்றும் அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகிய இரு அணிகளுக்கு இடையே பூசல்கள் நிலவி வரும் வேளையில், அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் 12-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

பொதுச் செயலாளர் பதவியியிருந்து சசிகலா நீக்கம் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் வரும் 12-ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுகவின் பொதுக்குழுவினை கூட்டுவதற்கு தடை விதிக்க கோரி, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏவான வெற்றிவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவரது சார்பாக மூத்த வழக்கறிஞர் டி.வி.ராமானுஜம் மனுவினை தாக்கல் செய்தார். மனுவினை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி கார்த்திகேயன், விசாரணை வரும் திங்கள் (11.09.17) அன்று நடைபெறும் என்று உத்தரவிட்டார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.