ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

பொங்கலுக்கான ரயில் பயணச் சீட்டு முன்பதிவு இன்று தொடங்கியது

வரும் ஆண்டு (2018) பொங்கல் பண்டிகைக்கு ஊருக்குச் செல்வதற்கான ரயில் பயணச் சீட்டு முன்பதிவு இன்று வெள்ளிக்கிழமை (செப். 15) காலை தொடங்கியது.

News image
Updated On :15 செப்டம்பர் 2017, 4:03 am

வரும் ஆண்டு (2018) பொங்கல் பண்டிகைக்கு ஊருக்குச் செல்வதற்கான ரயில் பயணச் சீட்டு முன்பதிவு இன்று வெள்ளிக்கிழமை (செப். 15) காலை தொடங்கியது.

வரும் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் ரயில் பயணச் சீட்டுக்கு முன்பதிவு செய்யலாம்.

பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் ஏராளமானோர் ஜனவரி 12 ஆம் தேதியே சொந்த ஊருக்குப் பயணம் மேற்கொள்வார்கள். இதனால் ஜனவரி 12 ஆம் தேதி பயணம் செய்பவர்கள் வெள்ளிக்கிழமை (செப். 15) முதல் முன்பதிவு மேற்கொள்ளளலாம். அதேபோல ஜனவரி 13 ஆம் தேதி ஊருக்குச் செல்ல முன்பதிவு செய்பவர்கள் செப். 16(சனிக்கிழமை) முதல் முன்பதிவு செய்யலாம்.

பயணிகளின் வசதிக்காக 4 மாதங்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகை, வரும் ஜனவரி மாதம் 13-ம் தேதி முதல் 16 வரை கொண்டாடப்படுகிறது.

இதேபோல், பொங்கல் முடிந்து சென்னை திரும்புவதற்கான முன்பதிவு செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.