எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகைக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை வருகை தந்தார். பயணியர் மாளிகையில் முதல்வரை சந்தித்து நாகை சட்டப்பேரவை உறுப்பினர் எம். தமிமுன் அன்சாரி கோரிக்கை மனு அளித்தார். அதில் பேரறிவாளனுக்கு பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்றும், 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகளை சாதி, மத, அரசியல், வழக்கு பேதமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். பின்னர் பேரறிவாளனின் பரோல் நீட்டிப்பு குறித்து சட்டநிபுணர்களிடம் கருத்து கேட்பதாகவும், சிறைவாசிகள் விடுதலை குறித்து உச்சநீதிமன்ற வழிகாட்டல்படி நடப்போம் என முதல்வர் பதில் தெரிவித்ததாக கூறினார்.