/

தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உள்ளது. இதன் காரணமாக

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:45 pm

DIN

சென்னை: தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:

வங்கக்கடல் பகுதியில் உருவான மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் இன்று புதன்கிழமை(செப்.27) அநேக இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யும். தென் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையின் சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.