ஜெயலலிதாவை பார்த்தேன் என கூறிய அமைச்சர்களுக்கு என்ன தண்டனை? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது உடல்நிலை குறித்து பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் இடம்பெற்றிப்பதாக சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,
ஜெயலலிதாவுக்கு ஏன் வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்கிற கேள்விக்கு சரியான பதில் இல்லை. ஜெயலலிதாவை பார்க்க வந்த அருண்ஜேட்லி, அமித்ஷா ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. ஜெயலலிதாவை சந்திக்க பிரதமர் வராதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.
ஜெயலலிதாவை பார்த்தேன் என கூறிய அமைச்சர்களுக்கு என்ன தண்டனை. ஜெயலலிதா உடல்நிலை குறித்து மத்திய, மாநில அரசுகள் தெளிவுபடுத்தவில்லை. இவ்வாறு அவர் குற்றஞ்சாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


