/

சசிகலாவின் வழக்கறிஞர் வீட்டிலும் வருமானவரித் துறை சோதனை

நாமக்கலில் உள்ள சசிகலாவின் வழக்கறிஞர் வீட்டிலும் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

News image
Updated On :9 நவம்பர் 2017, 4:20 am

நாமக்கலில் உள்ள சசிகலாவின் வழக்கறிஞர் வீட்டிலும் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள், உதவியாளர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, தஞ்சை, புதுக்கோட்டை, நாமக்கல், திருச்சி, மன்னார்குடி, பெங்களூரு என 150க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நீடித்து வருகிறது.

இந்நிலையில் நாமக்கலில் உள்ள சசிகலாவின் வழக்கறிஞரான செந்தில் வீட்டிலும் வருமானவரித் துறை சோதனை நடத்தி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.