தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் காவிரி பாய்ந்தோடும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை வியாழக்கிழமை சந்தித்த பின் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் 30 மாவட்டங்களில் மக்களைச் சந்தித்து பல்வேறு பிரச்னைகள் குறித்து அறிந்தேன். அவற்றை ஆளுநரிடம் பகிர்ந்து கொண்டேன். சில விஷயங்கள் பற்றி அவரும் கேட்டறிந்தார்.
காவிரிப் போராட்டத்தால் தமிழகம் போராட்டக் களமாக மாற்றப்படுகிறது. மக்கள் மனநிலை பற்றிய கருத்துகளையும் தெரிவித்தேன். இச்சந்திப்பு நல்ல கருத்துப் பரிமாற்றம். காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் அரசியல் செய்கின்றன. இன்னும் சில வாரங்களில் தமிழகத்தில் காவிரி பாய்ந்தோடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








