பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

திமுகவின் போராட்டங்களால் மக்கள் அவதி: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி

திமுகவின் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களால் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

News image
Updated On :6 ஏப்ரல் 2018, 1:29 am IST

திமுகவின் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களால் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.
சிவகாசியில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவே அதிமுக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது. இதையடுத்து மத்திய அரசு ஒரு குழு அமைத்துள்ளது. எனவே அதிமுக போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. எதிர் கட்சிகளின் போராட்டம் அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உள்ளதே தவிர காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதற்காக அல்ல. 
நாங்கள் அமைதி வழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். திமுக உள்ளிட்ட கட்சிகள் சாலை மறியல், ரயில் மறியல் என மக்களைதுன்புறுத்தும் போராட்டங்களை நடத்துகின்றன. எதிர் கட்சிகள் காவிரி பிரச்னைக்கு போராட்டம் நடத்துவதை வரவேற்கிறோம். அது அறவழிப் போராட்டமாக இருக்க வேண்டும். மத்திய அரசில் திமுக 14 ஆண்டுகாலம் கூட்டணி கட்சியாக இருந்தது. அப்போது திமுக நினைத்திருந்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, நடவடிக்கை எடுத்திருக்கலாம். இப்போது தும்பைவிட்டுவிட்டு வாலைப்பிடித்த கதையாக போராட்டம் நடத்துகிறார்கள். கமல்ஹாசன் எழுதி கொடுக்கும் வசனத்தை படித்து நடிப்பவர்.இபோது தான் ரயிலை பார்க்கிறேன் என்கிறார். இவ்வளவு நாள் எங்கிருந்தார்.தமிழகத்தில் சுனாமி தாக்கியபோது என்ன செய்தார். சென்னையில் வெள்ளம் ஓடியபோது வெளிநாடு சென்றுவிட்டார். ஏதோ இப்போதுதான் தமிழக மக்களை காப்பாற்றுவதுபோல பேசி வருவது நல்ல நகைச்சுவை. தேர்தல் வந்தால் எங்கள் கட்சிதான் ஜெயிக்கும் என பல கட்சியினர் கனவில் மிதக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுகதான் ஜெயிக்கும் என்றார் அமைச்சர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.