இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

முதுநிலை மருத்துவம்: நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகே தகுதிப் பட்டியல்

உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு நிறைவடைந்த பின்னரே முதுநிலை மருத்துவப் படிப்பில் தமிழக இடங்களுக்கான தகுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர்

Updated On :6 ஏப்ரல் 2018, 2:24 am IST

உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு நிறைவடைந்த பின்னரே முதுநிலை மருத்துவப் படிப்பில் தமிழக இடங்களுக்கான தகுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஜி.செல்வராஜ் கூறினார்.
2018-19 -ஆம் கல்வியாண்டு முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைமுறைகள் மார்ச் 17 -ஆம் தேதி தொடங்கின. 9,848 பேர் இந்தப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர். விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், தகுதிப் பட்டியல் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அகில இந்திய இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வும் நிறைவடைந்துவிட்ட நிலையில், தமிழக இடங்களுக்கான தகுதிப்பட்டியலை மாணவர்கள் எதிர்நோக்கியுள்ளனர். 
இதுதொடர்பாக டாக்டர் ஜி.செல்வராஜ் கூறும்போது, 'அரசு மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குவது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு நிறைவடைந்து தீர்ப்பு வெளியானால்தான், அதன் அடிப்படையில் தகுதிப் பட்டியலை தயார் செய்து வெளியிட முடியும்.
உள்ள வழக்கில் வெள்ளிக்கிழமை (ஏப்.6) தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பு வெளியாகும்பட்சத்தில் அடுத்த நாளே தகுதிப் பட்டியலை வெளியிட இயலும் என்றார்' அவர். 
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விவரக் குறிப்பேட்டில் தகுதிப் பட்டியல் ஏப்ரல் 9 -ஆம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.