சென்னை: தமிழ் மொழி வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களை சிறப்பிக்கும் வகையில் தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது உட்பட 90 விருதுகளை, முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் வழங்கி கௌரவித்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், 2017ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, உவேசோ விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது, ஜி.யு. போப் விருது, உமறுப்புலவர் விருது, இளங்கோவடிகள் விருது, 2016ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது, 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளுக்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகள் மற்றும் தமிழ்ச் செம்மல் விருதுகள் என மொத்தம் 90 விருதுகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்கள்.
தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபடும் சான்றோர்களையும், தமிழறிஞர்களையும் சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு, ஆண்டு தோறும் சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட தமிழ் அறிஞர்களுக்கும், சான்றோர்களுக்கும் இன்று விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!

காஞ்சிபுரம் அகத்தீஸ்வரர் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்

எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


