காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: காவிரி விவகாரத்தில் மத்திய அரசு சார்பில் 'ஸ்கீம்' என்பதற்கு விளக்கம் கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி நீர் பங்கீடு தொடர்பாக ஒரு வரைவுத் திட்டத்தை மே 3-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணையை மே 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இது மத்திய அரசின் காலம் தாழ்த்துகிற முயற்சிக்கு உதவி செய்யும் வகையிலேயே அமைந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில், நடுவர் மன்றத்தின் அனைத்து அம்சங்களையும் ஏற்றுக்கொண்டு, அதில் குறிப்பிட்டுள்ள நதிநீர் பங்கீட்டு அளவை மட்டும் நாங்கள் மாற்றம் செய்துள்ளோம் எனக் கூறியிருந்த நீதிபதிகள், அதற்கு மாறாக இப்போது கூறுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
இந்தச் சூழலில் தமிழக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை உறுதியாகப் போராட்டத்தைத் தொடர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மக்களின் ஆதரவால் வெற்றியை நோக்கி பயணிக்கிறோம்: வி.செந்தில்பாலாஜி

கோவை ரயில்கள் தாமதமாக இயக்கம்

என்ஜினீயா் வீட்டில் நகைகள் திருட்டு

11.4.1976: பொது பணத்தில் நிறுவிய பாலம், கல்வி சாலைகளின் தனியார் பெயர்களை நீக்க த.நா. அரசு முயற்சி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


