சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

மத்திய அரசைக் கண்டித்து புதுச்சேரியில் காங்கிரஸார் உண்ணாவிரதம்

மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், நாட்டில் மத நல்லிணக்கம், சகோதரத்துவம், அமைதி மற்றும் ஒற்றுமை ஏற்பட வலியுறுத்தியும், புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை உண்ணாவிரதப்

News image

உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசுகிறார் காங்கிரஸ் மாநிலத் தலைவர் நமச்சிவாயம். உடன் மாநில முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர். 

Updated On :9 ஏப்ரல் 2018, 7:52 pm

மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், நாட்டில் மத நல்லிணக்கம், சகோதரத்துவம், அமைதி மற்றும் ஒற்றுமை ஏற்பட வலியுறுத்தியும், புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி சுதேசி மில் அருகே நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, காங்கிரஸ் மாநிலத் தலைவர் நமச்சிவாயம் தலைமை வகித்தார்.
இதில் முதல்வர் வி. நாராயணசாமி, அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், எம்எல்ஏ-க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, விஜயவேணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாஜக ஆட்சியில் பாதுகாப்பற்ற நிலை: உண்ணாவிரதத்தில் பங்கேற்ற முதல்வர் நாராயணசாமி பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்தியில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் மதக் கலவரங்கள், இன மோதல்கள் ஏற்பட்டு மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் திட்டமிட்டு தாக்கப்படுகின்றனர். இதனால், நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் ஆளும் கட்சியே முடக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு அதை நிறைவேற்றவில்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மே 3-ஆம் தேதி இறுதி நாள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசை எச்சரித்துள்ளனர். இதையும் மத்திய அரசு மீறினால், காவிரி நீர் கிடைக்காத விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம். சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஜாதி, மத மோதல்கள் ஏற்பட்டபோது, உண்ணாவிரதம் இருந்து நாட்டில் அமைதியை மகாத்மா காந்தி ஏற்படுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.