சென்னை: விஷால் மட்டும் தமிழரா என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் குறித்து கேள்வி எழுப்பிய இயக்குநர் பாரதிராஜாவுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் எதிர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு இசை பல்கலைக்கழக துணைவேந்தராக பிரமிளா குருமூர்த்தி என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்று சர்ச்சை எழுந்தது. அத்துடன் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்ட விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சென்னையில் திங்களன்று செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் பாரதிராஜா கேள்வி எழுப்பினார். அத்துடன் இது தொடர்பாக தமிழ்நாடு கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை என்னும் அமைப்பைத் துவக்கி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து இதுதொடர்பாக மனு அளித்தனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பொழுது, தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு துணைவேந்தராக தமிழரை நியமிக்காத விஷயம் பற்றி கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் விஷால் மட்டும் தமிழரா என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் குறித்து கேள்வி எழுப்பிய இயக்குநர் பாரதிராஜாவுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் எதிர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை அமைச்சர் ஜெயக்குமார் திங்களன்று சந்தித்தார் அப்பொழுது பிரமிளா குருமூர்த்தி மற்றும் சூரப்பா நியமனம் தொடர்பான சர்ச்சைகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
தமிழ்நாடு இசை பல்கலைக்கழக துணைவேந்தராக பிரமிளா குருமூர்த்தி நியமனம் தொடர்பாக சர்ச்சைகளை கிளப்புகிறார்கள். ஆனால் அவரது தந்தை தமிழகத்தைச் சேர்ந்தவர். தாயார் மட்டுமே கேரளவைச் சேர்ந்தவர். அத்துடன் தேர்வுக் குழுவினர் முறையான நடைமுறைகளை பின்பற்றியே தேர்வு செய்துள்ளனர்.
அதேபோல அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டது தொடர்பாகவும் புழுதி வாரித் தூற்றக் கூடாது. தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு துணைவேந்தராக தமிழரை நியமிக்கவில்லையா என்று சகோதரர் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
நான் கேட்கிறேன்..தயாரிப்பாளர் சங்கத் தலைவராக உள்ளவர் என்ன தமிழரா? பாரதிராஜா முதலில் தான் சார்ந்த துறையில் உள்ள விஷயங்களைச் சரி செய்ய வேண்டும்.பிறகு எல்லாவற்றையும் பேசலாம்.
இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருத்தணி கோயில் உண்டியலில் பணம் திருடியவா் கைது

அனைத்து மெட்ரோ நிலைய நுழைவு வாயில்கள் திறப்பு: டிஎம்ஆா்சி

வார இறுதியை முன்னிட்டு பாதுகாப்பை அதிகரித்த தில்லி காவல் துறை

மாணவா்களுக்கு புத்தகச் சுமை குறைக்கப்படும்: தமிழக கல்வி அமைச்சா் ராஜ்மோகன்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



