அருப்புக்கோட்டை பேராசிரியை விவகாரம் தொடர்பாக, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அமைத்துள்ள விசாரணை அதிகாரி தனது கள ஆய்வினை வியாழக்கிழமை (19) தொடங்குகிறார்.
சர்ச்சையில் சிக்கியுள்ள பேராசிரியை நிர்மலா தேவியிடமும் அவர் விசாரணை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக செல்லிடப்பேசி உரையாடல் வெளியானது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையில் விசாரணை ஆணையத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அமைத்துள்ளார்.
இன்று தொடக்கம்: விசாரணை அதிகாரி ஆர்.சந்தானம், தனது விசாரணையை வியாழக்கிழமை (ஏப்ரல் 19) தொடங்குகிறார். இதற்காக அவர் மதுரை செல்கிறார். அங்கு காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தவுள்ளார்.
பிற்பகலில் அருப்புக்கோட்டை செல்கிறார். அங்கு பயணியர் மாளிகையில் தங்கும் அவர், வெள்ளிக்கிழமையன்று பேராசிரியை நிர்மலா தேவி பணியாற்றிய கல்லூரிக்குச் சென்று விசாரணை நடத்தவுள்ளார். செல்லிடப்பேசி உரையாடல் தொடர்பாக, தகவல் தெரிந்தவர்கள் நேரில் சந்தித்து விவரங்களை அளிக்கலாம் என விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார்.
வரும் 30-க்குள் அறிக்கை: விசாரணை அதிகாரி சந்தானம் தனது அறிக்கையை வரும் 30-ஆம் தேதிக்குள்ளாக ஆளுநரிடம் அளிக்க வேண்டுமென ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, தனது களஆய்வுப் பணிகளை முடித்து விட்டு ஒரு வாரத்துக்குள் அறிக்கையை அளிக்க முடிவு செய்திருப்பதாக அதிகாரி சந்தானம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திரிணமூல் காங். எம்.பி மீது தாக்குதல்! சரிந்து விழுந்ததால் பரபரப்பு! | West Bengal

உலகின் தலைசிறந்த பயிற்சியாளர் லூயிஸ் என்ட்ரிக்..! பிஎஸ்ஜி அணியின் தலைவர் புகழாரம்!

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

கடற்படை தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!
விடியோக்கள்

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்


