ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் திங்கள்கிழமை மண்ணெண்ணெய் பாட்டில் வீசப்பட்டது.
குன்றக்குடி -காரைக்குடிச் சாலையில் வைத்திய சாலை நடத்தி வருபவர் பாஸ்கர் (34). இவர் ஆர்.எஸ்.எஸ். சேவா அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.
இவரது சகோதரர் பிரபாகர் குடும்பமும், பாஸ்கர் குடும்பமும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். பாஸ்கர் தற்போது ரிஷிகேஷ் சென்றுள்ளார்.
இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் பாஸ்கர் வீட்டில் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை வீசியுள்ளனர்.
இதில் வீட்டின் முகப்பில் நின்ற கார் தீப்பிடித்து சேதமடைந்தது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் குன்றக்குடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
