இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தஞ்சையில் முகாமிட்டிருந்த அதிவிரைவுப் படையினர் எதிர்ப்பு காரணமாக முகாமை காலி செய்தனர்

தஞ்சையில் முகாமிட்டிருந்த அதிவிரைவுப் படையினர், பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக முகாமை காலி செய்தனர்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 7:15 am

DIN


தஞ்சையில் முகாமிட்டிருந்த அதிவிரைவுப் படையினர், பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக முகாமை காலி செய்தனர்.

டெல்டா மாவட்டங்களில் காவிரிக்காக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதன் எதிரொலியாக அதிவிரைவுப் படையினர்  நேற்று கும்பகோணத்துக்கு வருகை தந்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் சாலை, ரயில் மறியல், மத்திய அரசு அலுவலங்கள் முற்றுகை என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 

இதுதவிர, கதிராமங்கலம், திருவாரூர், நன்னிலம் ஆகிய இடங்களில் ஓஎன்ஜிசி விவகாரம், நெடுவாசலில் ஹைட்டோர கார்பன் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு அறிவிப்பால் டெல்டா பகுதியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இப்படி டெல்டா மாவட்டத்தில் போராட்டங்கள் நடைபெறாத நாள்களே இல்லை நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், மத்திய பாதுகாப்பு படையின் ஒரு பிரிவான அதிவிரைவு படையினர் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு சனிக்கிழமை வந்தனர். 

தஞ்சாவூரில் தங்கியிருந்த இவர்கள் ஞாயிற்றுக்கிழமை திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று, அந்தந்த உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்களை சந்தித்து, தங்களது பகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்து விட்டு, மீண்டும் தஞ்சாவூருக்கு சென்றனர். 

தஞ்சாவூரில் ஒரு வார காலத்துக்கு தங்கியிருந்து இந்த அதிவிரைவு படையினர் மாவட்டம் முழுவதும் செல்லவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கும்பகோணம் காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ். கணேசமூர்த்தி கூறுகையில், மத்திய பாதுகாப்பு படையின்  கோவையில் உள்ள 105வது பிரிவின் அதிவிரைவு படையின் உதவி கமாண்டர் வி.எப்.கிளாரன்ஸ் தலைமையில் வந்துள்ள 40 வீரர்கள், கலவரம் ஏற்படக்கூடிய பகுதிகள் உள்ளனவா எனக் கேட்டறிந்தனர் என்றார். 

இந்த நிலையில், தஞ்சாவூரில் அதிவிரைவுப் படையினர் தங்கியிருக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்கள் முகாமை காலி செய்து கொண்டு தஞ்சாவூரில் இருந்து கிளம்பினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.