ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஸ்ரீவிலி. நீதிமன்றத்தில் பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆஜர்: 15 நாள் காவலில் வைக்க உத்தரவு

பாலியல் பேர வழக்கில் கைதான பேராசிரியை நிர்மலாதேவிக்கு உடந்தையாக இருந்ததாக, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி

News image
நீதித்துறை நடுவர் மன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்திவிட்டு வெளியே போலீஸாரால் அழைத்து வரப்பட்ட உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி.
Updated On :30 ஏப்ரல் 2018, 9:02 pm

DIN

பாலியல் பேர வழக்கில் கைதான பேராசிரியை நிர்மலாதேவிக்கு உடந்தையாக இருந்ததாக, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை, 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதித்துறை நடுவர் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட உதவிப் பேராசிரியர் முருகனை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும், ஆராய்ச்சி மாணவரும், தற்காலிக ஆசிரியருமான கருப்பசாமியை 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும், சிபிசிஐடி போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
இந்நிலையில், இருவரிடமும் விசாரணை முடிவடைந்ததை அடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸார் சாத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர். ஆனால், நீதித்துறை நடுவர் விடுமுறை என்பதால், பொறுப்பு நீதித்துறை நடுவரான ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித் துறை நடுவர் நீதிமன்றம் எண்-2-க்கு இருவரையும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். 
போலீஸார், நீதித்துறை நடுவர் பரமசிவம் வீட்டில் இருவரையும் திங்கள்கிழமை ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, இருவரையும் மே 14 ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும், அதுவரை நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார். ஆனால், இருவரும் தங்களை விருதுநகரில் உள்ள மாவட்டச் சிறையில் அடைக்குமாறு கேட்டுக்கொண்டனர். அதன்பேரில், இருவரையும் விருதுநகர் மாவட்டச் சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.