திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை - ஐஏஎஸ் தேர்வில் ஜெயித்து வார்த்தைகளை நிஜமாக்கிய பெண்

யுபிஎஸ்சி நடத்திய மத்திய பணியாளர் தேர்வில் இந்திய அளவில் 106வது ரேங்க் எடுத்து வெற்றி பெற்றுள்ளார் ஈரோட்டைச் சேர்ந்த பிரியங்கா போத்ரா.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 10:32 am

DIN


ஈரோடு: யுபிஎஸ்சி நடத்திய மத்திய பணியாளர் தேர்வில் இந்திய அளவில் 106வது ரேங்க் எடுத்து வெற்றி பெற்றுள்ளார் ஈரோட்டைச் சேர்ந்த பிரியங்கா போத்ரா.

ராஜஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் அஷோக் போத்ரா - ஜெயமாலா தம்பதியரின் மகள் பிரியங்கா போத்ரா. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அஷோக் போத்ரா ஈரோட்டில் வந்து குடியேறினார்.

கடந்த 2015ம் ஆண்டு மும்பையில் பி.காம்., படித்து முடித்த பிரியங்கா, யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாரானார். சென்னை, பெங்களூர், தில்லி மற்றும் ஈரோட்டில் உள்ள பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி பெற்ற பிரியங்கா, சமீபத்தில் வெளியான யுபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் 106வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இது பிரியங்காவின் கனவோ லட்சியமோ இல்லை. மகள் பி.காம்., முடித்திருந்த போது, ஒரு நாள் அவரது தந்தை அஷோக் போத்ரா, உன்னை ஒரு மாவட்ட ஆட்சியராக பார்க்க விரும்புகிறேன் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.

அவ்வளவுதான், தந்தையின் கனவை நனவாக்கும் தீவிர முயற்சியில் இறங்கினார் மகள். கடும் பயிற்சி மற்றும் படிப்பில் தீவிர கவனம் போன்றவை பிரியங்காவை இன்று சாதனையாளர்கள் பட்டியலில் சேர்த்துள்ளது.

இது குறித்து பிரியங்கா கூறுகையில், எனது பெற்றோரின் உறுதுணை இல்லாமல், இதனை என் வாழ்நாளில் சாதித்திருக்கவே முடியாது என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.