திருத்தணியில் 108, வேலூரில் 107 டிகிரி வெயில்
தமிழகத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 108 டிகிரி வெயில் திங்கள்கிழமை பதிவானது.


தமிழகத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 108 டிகிரி வெயில் திங்கள்கிழமை பதிவானது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: கோடைக்காலம் உச்சத்தை எட்டியுள்ளதையடுத்து, தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. திருத்தணியில் 108, வேலூரில் 107, கரூர் மாவட்டம், பரமத்தியில் 106 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது. திருச்சியில் 105, தருமபுரி, சேலத்தில் தலா 104, மதுரையில் 103, சென்னையில் 102, கடலூர், நாமக்கல்லில் தலா 100 டிகிரி வெயில் பதிவானது.
இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தின் உள்மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 1), வெள்ளிக்கிழமை (மே 4), சனிக்கிழமை (மே 5) ஆகிய தினங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை அடுத்த இரண்டு நாள்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
மே 4-இல் கத்திரி வெயில் தொடக்கம்: கோடை காலத்தின் உச்சம் எனக் கருதப்படும் கத்திரி வெயில் காலம் வெள்ளிக்கிழமை (மே 4) தொடங்கவுள்ளது. தொடர்ந்து 25 நாள்கள், அதாவது மே 28-ஆம் தேதி வரை கத்திரி வெயில் காலம் உள்ளது. கடந்த ஆண்டும் கத்திரி வெயில் காலம் மே 4-ஆம் தேதி தொடங்கி மே 28-ஆம் தேதி வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...