பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

புதுச்சேரி கண் மருத்துவ மாணவியின் வழக்கும், நீதிபதியின் காரசார கருத்தும்

கருணை மதிப்பெண் கோரி புதுச்சேரி கண் மருத்துவ மாணவி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், அது தொடர்பான கருத்துகளையும் கூறியுள்ளது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 9:51 am

DIN


சென்னை: கருணை மதிப்பெண் கோரி புதுச்சேரி கண் மருத்துவ மாணவி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், அது தொடர்பான கருத்துகளையும் கூறியுள்ளது.

கருணை மதிப்பெண்ணுடன் ஒருவர் கண் மருத்துவரானால், அவரிடம் சிகிச்சை பெறும் நோயாளிகள்தான் பாதிக்கப்படுவர் என்று நீதிபதி வைத்தியநாதன் கூறியுள்ளார்.

கண் மருத்துவப் பாடத்தில் 2016, 2017ம் ஆண்டு தேர்வுகளில் தோல்வி அடைந்ததால் 3 கருணை மதிப்பெண் கோரி புதுச்சேரி மருத்துவப் பல்கலை மாணவி பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ஒரு முறை மட்டும் தேர்வில் தோல்வி அடைந்தால் கருணை மதிப்பெண் வழங்கலாம் என்பது பல்லை விதி. மாணவி தொடர்ந்து 2 முறை தோல்வி அடைந்ததால் கருணை மதிப்பெண் வழங்கப்படாது என்று புதுச்சேரி பல்கலைக்கழகம் பதில் அளித்துள்ளது.

புதுச்சேரி மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பதிலை ஏற்று மாணவி பாரதியின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி வைத்தியநாதன், கருணை மதிப்பெண்ணுடன் ஒருவர் கண் மருத்துவரானால், அவரிடம் சிகிச்சை பெறும் நோயாளிகள்தான் பாதிக்கப்படுவர். பிறகு மருத்துவம் பார்க்க வரும் நோயாளிக்கு பார்வை கிடைக்க கடவுளின் கருணை  தேவைப்படும் என்று கருத்துக் கூறியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.