/

திமுக எம்எல்ஏ-க்கள் காவேரி மருத்துவமனை வருகை

திமுக தொண்டர்களின் வருகை அதிகரித்து வருகிறது. மருத்துவமனைக்கு முன்பாக குவிந்த தொண்டர்கள் ‘எழுந்து வா தலைவா’என்று கோஷங்களை எழுப்பி வருகின்றனர். 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2018, 9:43 pm IST

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் சிறு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  அவரது வயது மூப்பு தொடர்புடைய பிரச்னைகளின் காரணமாக அவரது முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை இயல்பாக வைத்திருப்பது சவாலாக உள்ளது.

அவர் தொடர் கண்காணிப்பு மற்றும் தீவிர மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார்.  அடுத்த 24 மணிநேரத்தில் அவருக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைக்கு அவர் எதிர்வினையாற்றுவதைப் பொறுத்தே எதையும் கணிக்க முடியும் என்று காவேரி மருத்துவமனை திங்கள்கிழமை மாலை அறிக்கை வெளியிட்டது.

இதையடுத்து, திமுக தொண்டர்களின் வருகை அதிகரித்து வருகிறது. மருத்துவமனைக்கு முன்பாக குவிந்த தொண்டர்கள் ‘எழுந்து வா தலைவா’என்று கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே காவேரி மருத்துவமனை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு அதிகளவில் போலீஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், துரைமுருகன், வைரமுத்து ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர். இதையடுத்து திமுக எம்எல்ஏக்கள் டிஆர்பி ராஜா, அன்பில் மகேஷ், செந்தில்குமார், வாகை சந்திரசேகர், செஞ்சி மஸ்தான், பல்லாவரம் கருணாநிதி, அன்பரசன் உள்ளிட்டோர் வந்தடைந்தனர். மேலும், தில்லியில் இருந்து திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன் சென்னை புறப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.