சென்னை: பணிப்புறக்கணிப்பில் ஈடுபடாமல் நீதிமன்றத்துக்கு வந்த வழக்குரைஞர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட நீதிபதி இந்திரா பானர்ஜி, நன்றி வணக்கம் என்று கூறி தனது உரையை முடித்தார்.
சென்னை தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். புது தில்லியில் நாளை பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
இந்த நிலையில், சென்னை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு பிரிவு உபச்சார விழா சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது.
அப்போது பேசிய இந்திரா பானர்ஜி, முதல்வரை நேரில் சந்தித்த போது உயர் நீதிமன்றப் பணிகளுக்காக நிதி ஒதுக்குமாறு கோரினேன். உயர் நீதிமன்றப் பணிகள் எதுவும் உரிய நேரத்தில் நிதி ஒதுக்காததால் பணிகள் தடைபடாமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன்.
உயர் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட திட்டங்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும் என்று முதல்வர் உறுதி அளித்தார்.
என்னுடைய பணிக்காலத்தில் வழக்குரைஞர்கள் யாரும் பணியை புறக்கணிக்கவில்லை. அதற்காக வழக்குரைஞர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறிய இந்திரா பானர்ஜி, நன்றி வணக்கம் என தமிழில் கூறி உரையை முடித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


