2ஜி வழக்கில் தொடர்புடைய அமலாக்கத் துறை மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை தில்லி உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த வழக்கில் மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்பட 14 பேரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்ததற்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவை சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் கடந்த மார்ச் மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், அமலாக்கத்துறை துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, உயர் நீதிமன்ற நீதிபதி நாஜ்மி வஜீரி அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால், நீதிபதி விடுப்பில் இருந்ததால் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக கோர்ட் மாஸ்டர் தெரிவித்தார்.
2 ஜி வழக்கில் குற்றம்சாட்டுள்ளப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி ஆகியோருக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகர் யஷ்ஷின் டாக்ஸிக் புதிய போஸ்டர்!

இன்றைய செய்திகள் ஜூலை 26 - நேரலை

நெல்லை ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக டிஜிட்டல் லாக்கர் திறப்பு!

டிமான்டி காலனி - 3 முதல் ஹாய் வரை... ஜீ5 ஓடிடியில் வெளியாகும் படங்கள், இணையத் தொடர்கள்!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


