தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மாவட்டங்களில் பாதுகாப்பினை பலப்படுத்த காவல்துறையினருக்கு டிஜிபி உத்தரவு

தமிழகத்தின் மாவட்டங்களில் பாதுகாப்பினை போதிய அளவு பலப்படுத்த காவல்துறையினருக்கு டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2018, 10:49 am

சென்னை: தமிழகத்தின் மாவட்டங்களில் பாதுகாப்பினை போதிய அளவு பலப்படுத்த காவல்துறையினருக்கு டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி  உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையானது தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் மாவட்டங்களில் பாதுகாப்பினை போதிய அளவு பலப்படுத்த காவல்துறையினருக்கு டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் சற்று முன்பு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஒவ்வொரு மாவட்ட காவல்துறையிலும் அனைத்து ஆணையர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், மண்டலத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் ஆகியோர் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழகத்தின் மாவட்டங்களில் முக்கிய இடங்களில் பாதுகாப்பினை போதிய அளவு பலப்படுத்த வேண்டும்.

பாதுகாப்பு பணிகளுக்கு என்று போதுமான எண்ணிக்கையிலான காவலர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.