சென்னை: உடல்நலக் குறைவால் மரணமடைந்த கருணாநிதியின் உடலுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் செவ்வாய் மாலை 06.10 மணியளவில் மரணமடைந்தார். தற்பொழுது சென்னை ராஜாஜி அரங்கில் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், நடிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் அவரது பூத உடலுக்கு தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
இந்நிலையில் உடல்நலக் குறைவால் மரணமடைந்த கருணாநிதியின் உடலுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த அவர் ஹெலிகாப்டர் மூலம் ராஜாஜி அரங்கை வந்தடைந்தார். அவருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய அமைச்சர்கள் பொன்னார் , நிர்மலா சீதாராமன் மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஆகியோர் உடன் வந்தனர்.
அவர்களை திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோர் வரவேற்று அழைத்து வந்தார்கள்.
வந்தவர் கருணாநிதி உடல் அடங்கிய பேழைக்கு மலர் வளையம் வைத்து, வணக்கம் தெரிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் உடலுக்கு அருகில் நின்றிருந்த கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாளின் கைகளைப் பிடித்து, கண்களில் ஒற்றி ஆறுதல் கூறினார். பின்னர் அவரது மகள் கனிமொழியின் தலையில் கை வைத்து, ஆறுதல் கூறி பேசிக் கொண்டிருந்தார்.
பின்னர் அங்கிருந்த திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் சென்றவர் சிறிது நிமிடங்கள் தோளில் தட்டி பேசிக் கொண்டிருந்தார். பின்னர் முன்னர் வந்து பொதுமக்களை பார்த்து கை கூப்பினார். பிறகு திரும்பிச்செல்லும் வழியில் நடக்கத் துவங்கியவருடன் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் உடன் சென்றனர்.
பின்னர் மீண்டும் இருவருடனும் மோடி தனியாக நின்று தீவிரமாக பேசிக்கொண்டிருந்தார். அதன் பின்னர் புறப்பட்டுச் சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்! குறைந்தபட்ச ஓய்வூதியம் 7.5 மடங்கு உயர்வா?
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


