சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

கடைசி அரசியல் தலைவர்

அரசியல் தலைவர்களிலேயே கடைசி அரசியல் தலைவர் கருணாநிதி என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார்.

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST


அரசியல் தலைவர்களிலேயே கடைசி அரசியல் தலைவர் கருணாநிதி என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார்.
ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வெளிநாடு சென்றுள்ள இளையராஜா அங்கிருந்தவாறு ஊடகங்களுக்கு வியாழக்கிழமை அனுப்பியுள்ள விடியோ பதிவு: 
தமிழ்ப் பெருங்குடி மக்களே... கருணாநிதி மறைந்தது நமக்கெல்லாம் துக்க தினமேதான். இந்தத் துக்கத்தை எப்படி நாம் மாற்றிக் கொள்ளப் போகிறோம், எப்படி நாம் திரும்பி வரப் போகிறோம் என்பது தெரியவில்லை.
அரசியல் தலைவர்களிலேயே கடைசி அரசியல் தலைவர் கருணாநிதி. சினிமாத் துறையில் சுத்தமான தமிழ் வசனங்களை அள்ளி அள்ளி வழங்கிய கடைசி வசனகர்த்தா கருணாநிதி என்று சொல்லுகின்ற அளவுக்கு அவர் எழுதியிருக்கிறார். அரசியலாகட்டும், கலையாகட்டும், இலக்கியமாகட்டும், தமிழாகட்டும், எல்லாத் துறைகளிலும் தலைசிறந்து விளங்கிய கருணாநிதியின் இழப்பு, நமக்கெல்லாம் ஈடுசெய்ய முடியாத இழப்பு. உண்மையிலேயே ஈடுசெய்ய முடியாத இழப்பென்றால், அது கருணாநிதியின் இழப்புதான். 
இந்தத் தருணத்தில், இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக எனது இசைக் குழுவினருடன் ஆஸ்திரேலியா வந்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சி ஆறு மாதங்களுக்கு முன்பே திட்டமிட்ட நிகழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார் இளையராஜா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.