நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

பெங்களூரு விமான நிலையத்தில் திருமுருகன் காந்தி கைது: தேசவிரோதச் செயல் உள்பட 3 சட்டப் பிரிவுகளில் வழக்கு

கர்நாடக மாநிலம் பெங்களூரு விமான நிலையத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி வியாழக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST


கர்நாடக மாநிலம் பெங்களூரு விமான நிலையத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி வியாழக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டார்.
அவர் மீது சென்னை சைபர் குற்றப் பிரிவு போலீஸார், தேசவிரோதச் செயலில் ஈடுபட்டது உள்ளிட்ட 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானது குறித்தும், சென்னை-சேலம் பசுமை வழிசாலைத் திட்டம் குறித்தும் பேசினாராம். திருமுருகன்காந்தியின் இந்தப் பேச்சு, மே 17 இயக்கத்தின் முகநூல் பக்கத்தில் விடியோ காட்சியாக வெளியிடப்பட்டிருந்தது.
இதில் திருமுருகன்காந்தி அரசுக்கு எதிராக சில கருத்துகளை கூறியிருந்தாராம். இந்நிலையில் இந்த விடியோ காட்சியைப் பார்த்த சென்னை குரோம்பேட்டை நியூ காலனியைச் சேர்ந்த க.மதன்குமார் என்பவர், சென்னை பெருநகர காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்தனர். விசாரணையில், திருமுருகன்காந்தி அரசுக்கு எதிரான பேசியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அரசுக்கு எதிராக பொதுமக்களிடையே பகை ஊட்டும் வகையில், தேச விரோதச் செயலில் ஈடுபட்டதாகவும், உள்நோக்கத்தோடு கலகத்தை ஏற்படுத்த திட்டமிட்டதாகவும், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்த முயற்சித்ததாகவும் 3 சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
பெங்களூருவில் கைது: இந்நிலையில், ஜெனீவாவில் இருந்து திருமுருகன்காந்தி இந்தியாவுக்கு திரும்பி வரும்போது, அவரைக் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை சைபர் குற்றப் பிரிவு போலீஸார் எடுத்தனர். இதன் ஒரு பகுதியாக திருமுருகன்காந்தி, தேடப்படுவோர் பட்டியலில் இருப்பதாக நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு சைபர் குற்றப் பிரிவு போலீஸார் நோட்டீஸ் அளித்தனர். இந்நிலையில், ஜெனீவாவில் இருந்து விமானம் மூலம் பெங்களூருக்கு வியாழக்கிழமை அதிகாலை திருமுருகன்காந்தி வந்தார். அப்போது அவர் தேடப்படுவோர் பட்டியலில் இருப்பதைப் பார்த்த குடியுரிமைத் துறை அதிகாரிகளும், சுங்கத் துறை அதிகாரிகளும் திருமுருகன் காந்தியை கைது செய்து, பெங்களூரு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
பெங்களூரு போலீஸார், திருமுகன்காந்தி கைது செய்யப்பட்டது குறித்து, சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த சைபர் குற்றப்பிரிவு போலீஸார், பெங்களூரு சென்று திருமுருகன்காந்தியை சென்னைக்கு அழைத்து வந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.