சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ரயிலில் படிக்கட்டுப் பயணம்: நிகழாண்டில் 3,973 வழக்குகள் பதிவு

ரயில்களில் படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்ததற்காக நிகழாண்டில் ஜூன் மாதம் வரை 3,973 வழக்குகள் பதிவாகியுள்ளன.

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST


ரயில்களில் படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்ததற்காக நிகழாண்டில் ஜூன் மாதம் வரை 3,973 வழக்குகள் பதிவாகியுள்ளன.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து திருமால்பூர் நோக்கி கடந்த மாதம் 24-ஆம் தேதி காலை சென்ற மின்சார ரயிலில், படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்தவர்களில் 4 பேர் பரங்கிமலை ரயில் நிலையத்தில் உள்ள சிமென்ட் தடுப்புச் சுவரில் அடிபட்டு உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களில் ஒருவர் கடந்த மாதம் 26-ஆம் தேதி 
இரவு உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து இத்தகைய விபத்துகளைத் தடுக்க ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளைஎடுத்து வருகின்றனர். 
8 நாள்களில் 356 வழக்குகள்: சென்னை ரயில்வே கோட்டத்தில் விரைவு ரயில்கள், மின்சார ரயில்களில் படிக்கட்டில் தொங்கியவாறு பயணிப்போர் மீது வழக்கு போடுவது, அபராதம் விதிப்பது அல்லது தண்டனைக்கான குற்றப் பதிவு ஆகிய நடவடிக்கையில் துரிதமாக இறங்கியுள்ளனர்.
ரூ.1000 வரை அபராதம்: பரங்கிமலை விபத்து நடந்த ஜூலை 24 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை 356 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர்களுக்கு தலா ரூ.600 முதல் 1,000 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் படியில் தொங்கியவாறு பயணம் செய்யக்கூடாது என்று ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மீறிப் பயணிப்போர் மீது தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
சென்னை ரயில்வே கோட்டத்தில் நடப்பாண்டில் ஜூன் இறுதி வரை ரயில்களின் படிக்கட்டில் பயணம் செய்தது தொடர்பாக 3,973 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், 2017-ஆம் ஆண்டில் 7,633 வழக்குகளும், 2016-ஆம் ஆண்டு 6,908 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அபராதம் செலுத்தாதவர்களுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு நடவடிக்கைகள்: பரங்கிமலை விபத்துக்குப் பிறகு, ரயில் பயணிகளிடம் விழிப்புணர்வு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் கலாசார நிகழ்ச்சிகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. சென்னையில் அனைத்து ரயில் நிலையங்களிலும் வைப்பதற்காக 1,000 பேனர்கள் தயார் நிலையில் உள்ளன. படிக்கட்டுகளில் நின்று பயணிப்பதால் ஏற்படும் அபாயத்தை பயணிகள் உணரும் வகையில், படிக்கட்டில் பயணம் செய்து, விபத்தில் சிக்கி இறந்தவர்களின் கோரப் படங்கள் இடம் பெற்றுள்ளன.
இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படை முதுநிலை ஆணையர் லூயிஸ் அமுதன், பரங்கிமலை சம்பவத்துக்கு பிறகு, ரயில் படிக்கட்டில் பயணம் செய்தால் ஏற்படும் விபரீதம் தொடர்பாக 500-க்கும் அதிகமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. பரங்கிமலை விபத்துக்கு முன்னதாக, 831 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இவை தொடர்ச்சியாக நடத்தப்படும். மேலும், படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.