ரயில்களில் தங்கம் கடத்தலை தடுக்க நடவடிக்கை: ஏடிஜிபி.

ரயில்களில் தங்கம் கடத்தப்படுவதைத் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என ரயில்வே காவல்துறை ஏடிஜிபி. சைலேந்திரபாபு தெரிவித்தார். 

ராமேசுவரத்தில் கடலோரக் காவல்துறை அலுவலகம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் வியாழக்கிழமை மரக்கன்றுகள் நடும் ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு.

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

ரயில்களில் தங்கம் கடத்தப்படுவதைத் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என ரயில்வே காவல்துறை ஏடிஜிபி. சைலேந்திரபாபு தெரிவித்தார். 
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ஓலைக்குடா பிசாசு முனைப் பகுதியில் தமிழக கடலோரக் காவல்துறை அலுவலகம் அமைக்கப்பட உள்ள இடத்தை வியாழக்கிழமை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியது :
தமிழகக் கடலோரப் பகுதிகளில் இருந்து இயக்கப்படும் ரயில்களில் தங்கம் கடத்தல் நடைபெற உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடலோரப் பகுதிகளில் இருந்து இயக்கப்படும் ரயில்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க ரயில் நிலையங்களில் விபத்தை ஏற்படுத்தும் வகையிலுள்ள பக்கவாட்டு சுவர்களை அப்புறப்படுத்தும்படி கூறியுள்ளோம். இது தவிர ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்வோரை பயணிகளே தங்கள் செல்லிடப்பேசியில் படம் எடுத்து அதை ரயில்வே காவல்துறை டுவிட்டர் கணக்கிற்கு அனுப்பலாம் அல்லது கட்டணமில்லா 1512 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். இதனால் விபத்துகள் தடுக்கப்படும்.
இது தவிர முக்கிய ரயில் நிலையங்களில் தற்போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 
இதை நிர்பயா திட்டத்தின் கீழ் அனைத்து ரயில் நிலையங்களிலும் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா, கடலோரக் காவல்துறை எஸ்.பி. அசோக்குமார், மண்டபம் கடலோரக் காவல்படை கமாண்டர் வெங்கடேஷ் மற்றும் என்.சி.சி, என்.எஸ்.எஸ். மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.