சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

தமிழகத்துக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உத்தரவு!

தமிழகத்திற்கு அடுத்த 15 நாள்களுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறித்து...

Karnataka ordered to release 9,000 cusecs of water to Tamil Nadu

காவிரி - கோப்புப் படம்

Published On :25 ஆகஸ்ட் 2026, 6:26 pm IST

தமிழகத்திற்கு அடுத்த 15 நாள்களுக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட தில்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடகத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகம், தமிழ்நாடு, புதுவை, கேரளம் ஆகிய 4 மாநிலங்களும் காவிரி நீரைப் பகிர்ந்துகொள்வதற்காக உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைக்கப்பட்டது.

இந்த இரண்டு அமைப்புகளும் காவிரி நதிநீர் பங்கீடு குறித்து அனைவருக்கும் பலனளிக்கும் வகையிலான உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. அந்தவகையில் காவிரி மேலாண்மை ஆனையத்தின் 54வது கூட்டம் தில்லியில் இன்று நடைபெற்றது.

இதில், 4 மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை முன்வைத்தனர். கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறந்துவிடப்படுவது குறித்து தமிழக அதிகாரிகள் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் சுட்டிக்காட்டினர்.

பிறகு, தண்ணீர் இருப்பு மற்றும் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறித்து கர்நாடக அதிகாரிகள் ஆணையத்திடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இக்கூட்டத்தின் முடிவில், தமிழகத்துக்கு அடுத்த 15 நாள்களுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் அடுத்த 15 நாள்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்துக்கு 11.66 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.