முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.40 லட்சம் கனஅடியாகக் குறைவு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து திங்கள்கிழமை பிற்பகலில் நொடிக்கு 1.40 லட்சம் கனஅடியாகக் குறைந்தது.

News image

காவிரி ஆஜ்ற்றில் நீர்வரத்துக் குறைந்துள்ளதால், ஒகேனக்கல்லில் பிரதான அருவிக்கு செல்லும் பாதையில் குறைந்த அளவில் ஓடும் வெள்ளநீர். 

Updated On :21 ஆகஸ்ட் 2018, 2:47 am IST


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து திங்கள்கிழமை பிற்பகலில் நொடிக்கு 1.40 லட்சம் கனஅடியாகக் குறைந்தது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், கேரளத்தின் வயநாடு மற்றும் மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்ததால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இந்த அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால், கடந்த ஒரு மாதமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தும், சில நாள்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் வந்தது. 
இந்த நிலையில் கர்நாடகம் மற்றும் கேரளத்தில் மழையின் அளவு குறைந்துள்ளதால் அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பும் குறைக்கப்பட்டது. கர்நாடக அணைகளிலிருந்து திங்கள்கிழமை காலை 9 மணி நிலவரப்படி நொடிக்கு 1.60 லட்சம் கனஅடி நீர் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருந்தது. இதையடுத்து மாலை 3 மணி நிலவரப்படி நீர்வரத்து படிப்படியாகக் குறைந்து தற்போது நொடிக்கு 1.40 லட்சம் கனஅடி நீர் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. மேலும், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கின் போது சிக்கி தவித்த புளியமரத்துக் கொம்பு மற்றும் கொண்டலான் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு அளிக்கப்பட்டு வருகிறது. ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் 10- ஆவது நாளாக திங்கள்கிழமையும் தடை விதிக்கப்பட்டிருந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.