திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

அவரால் இட்லிக் கடை மட்டுமே வைக்க முடியும்: அழகிரியைச் சீண்டிய சுவாமி 

அவரால் இட்லிக் கடை மட்டுமே வைக்க முடியும் என்று திமுக தலைவர் கருணாநிதியின் மகன்  அழகிரியைச் சீண்டும் விதமாக பாஜக மூத்த தலைவர் சுவாமி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :23 ஆகஸ்ட் 2018, 3:27 pm IST

சென்னை: அவரால் இட்லிக் கடை மட்டுமே வைக்க முடியும் என்று திமுக தலைவர் கருணாநிதியின் மகன்  அழகிரியைச் சீண்டும் விதமாக பாஜக மூத்த தலைவர் சுவாமி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு திமுகவில் தலைமைப் பதவி தொடர்பாக சலசலப்பு உருவாகியுள்ளது  திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அநேகமாக அடுத்த தலைவராக தேர்வு செய்யப் பட வாய்ப்பு உள்ள நிலையில், அழகிரி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். திமுகவின் உண்மைத் தொண்டர்கள் தன் பக்கம்தான் உள்ளனர் என்று கூறியுள்ள அழகிரி, அதை நிரூபிக்கும் விதமாக வரும் செப்டம்பர் 5 -ஆம் தேதி , கருணாநிதி சமாதி நோக்கி ஒரு லட்சம் தொண்டர்களுடன் மவுன ஊர்வலம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவரால் இட்லிக் கடை மட்டுமே வைக்க முடியும் என்று அழகிரியைச் சீண்டும் விதமாக பாஜக மூத்த தலைவர் சுவாமி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் வியாழனன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

திமுகவில் ஸ்டாலின்தான் அடுத்த தலைவராகப் போகிறார் என்பது உறுதியாகி விட்டது. ஆனால் அழகிரியால் இட்லி கடை மட்டுமே வைக்க முடியும்.

தமிழக பாரதிய ஜனதா தற்போது ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் பின்னால் ஓடும் வேலையை மட்டுமே சென்றுகொண்டிருக்கிறது. அதை நிறுத்திவிட்டு தங்களுக்கான தத்துவத்தை முன்னிறுத்தினால் மட்டுமே பாஜக வெற்றி பெற முடியும். வெறுமனே ரஜினிகாந்த்,  கமல்ஹாசன் பின்னால் சென்றால் பா.ஜ.க வுக்கு ஓட்டு கிடைக்காது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.