திமுக தலைவர் பொறுப்புக்கான வேட்புமனுவை ஸ்டாலின் தாக்கல் செய்தார்

திமுக தலைவர் பொறுப்புக்கான வேட்புமனுவை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் ஸ்டாலின் தாக்கல் செய்தார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

திமுக தலைவர் பொறுப்புக்கான வேட்புமனுவை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் ஸ்டாலின் தாக்கல் செய்தார். 

திமுக-வின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் திமுக-வின் தலைவர் மற்றும் பொருளாளருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தலைமைக் கழகத்தில் பெற்றுக்கொள்ளப்படுகிறது. 

இதை முன்னிட்டு தலைவர் பொறுப்புக்கான வேட்புமனுவை 65 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். 

இதைத்தொடர்ந்து, பொருளாளர் பொறுப்புக்கு துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.  

முன்னதாக,

திமுக தலைவர் பொறுப்புக்கான வேட்புமனுவை எடுத்துக்கொண்டு திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனை நேரில் சந்தித்து ஸ்டாலின் ஆசிபெற்றார். இதையடுத்து, திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்ற ஸ்டாலின் தனது வேட்புமனுவை நினைவிடத்தில் வைத்து ஆசிபெற்றார்.

இதைத்தொடர்ந்து, கருணாநிதியின் கோபாலபுர இல்லத்துக்குச் சென்று கருணாநிதியின் படத்துக்கு ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அங்கு, கருணாநிதியின் புகைப்படம், தயாளு அம்மாள் உள்ளிட்ட குடும்பத்தினரிடம் ஆசி பெற்று அண்ணா அறிவாலயம் வந்தடைந்தார். 

திமுக முதன்மை செயலாளர் துரைமுருகனும் பொருளாளர் பொறுப்புக்கான வேட்புமனுவை கருணாநிதியின் நினைவிடத்தில் வைத்து ஆசிபெற்றார். 

தலைவர் மற்றும் பொருளாளர் தேர்தல் விதிகள்:

தலைவர் மற்றும் பொருளாளர் பொறுப்புகளுக்காக போட்டியிடுவோர் பொறுப்பு ஒன்றுக்கு வேட்புமனுக் கட்டணம் ரூ.25,000 அளித்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.

வேட்புமனுக்கள் வரும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் காலை 4 மணி வரையில் தலைமைக் கழகத்தில் பெற்றுக்கொள்ளப்படும். 

27-ஆம் தேதி திங்கள்கிழமை பிற்பகல் 1.30 மணிக்குள் வேட்புமனு திரும்பப் பெறப்படும். 

பெறப்பட்ட வேட்புமனுக்கள் 27-ஆம் தேதி மாலை 5 மணி அளவில் பரிசீலினை செய்து வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும்.

தலைவர், பொருளார் ஆகிய பொறுப்புகளுக்காக போட்டியிடுவோர்களை பொதுக்குழு உறுப்பினர்கள் 5 பேர் முன்மொழிய, 5 பேர் வழிமொழிய வேண்டும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com