கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

தமிழகத்தில் பிரசவகால இறப்புகள் குறைந்துள்ளன: முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் பிரசவகால தாய் -சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளது என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

News image

கோனேரிப்பட்டியில் கட்டப்பட்டுள்ள புதிய சுகாதார நிலையத்தை வியாழக்கிழமை திறந்துவைத்து, அம்மா குழந்தைகள்நல பரிசுப் பெட்டகத்தை பயனாளிக்கு  வழங்கும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன், சேலம் மாவட்ட ஆட்சிய

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

சேலம்: தமிழகத்தில் பிரசவகால தாய் -சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளது என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கோனேரிப்பட்டியில் கட்டப்பட்டுள்ள, புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வர் வியாழக்கிழமை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியது:
முதலிடம்: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின்கீழ் 2011-18 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 -ஆம் தேதி வரை ரூ.178.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2,10,481 பேர் பயனடைந்துள்ளனர்.  இத்திட்டத்தின் பயனாக தமிழகத்தில், பிரசவகால தாய் -சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.
அகில இந்திய அளவில் மருத்துவத் துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் உள்ள மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சையை அளித்து, மருத்துவச் சேவை அளிப்பதில் அகில இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளனர்.
சிறப்பிடம்: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான், எந்தவொரு ஆட்சியிலும் செய்யாத அளவிற்கு  கல்வித் துறையில் சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மறைந்த முதல்வர் ஜெயலலிதா 65 கலை -அறிவியல் கல்லூரிகளைத் தொடங்கினார்.  புதிதாக பொறுப்பேற்ற அரசு கடந்த ஆண்டில் 11 அரசு கலை -அறிவியல் கல்லூரிகளை கட்டிக் கொடுத்துள்ளது.
உபரிநீரை பயன்படுத்த ஆய்வு: வெள்ளரிவெள்ளியில் எம்.பி.க்கள் வி.பன்னீர்செல்வம், அர்ச்சுனன் ஆகியோரின் நிதியுதவியுடன், மேட்டூர் அணையின் கிழக்குக்கரை கால்வாயிலிருந்து வெளியேறும் உபரிநீரை பம்ப் செய்து, ஏரிகளுக்கு தண்ணீரை கொண்டுசென்று, நீர் நிரப்பப்பட்டு வருகிறது.தமிழகம் முழுவதும் எங்கெங்கெல்லாம் உபரி நீர் இருக்கிறதோ, அந்த உபரிநீரை பயன்படுத்துவதற்காக, ஓய்வுபெற்ற 6 தலைமை பொறியாளர்களை நியமித்து தடுப்பணைகள் கட்டுதல், ஏரிகளை நிரப்புதல் போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் முதல்வர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.