மேக்கேதாட்டு விவகாரம்: பிரதமர் மோடியை சந்திக்க ஆளுநர் இன்று தில்லி பயணம்
மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிய சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று


மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிய சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று (டிச.7) தில்லி செல்ல உள்ளார்.
கர்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளை தொடங்க உள்ளதற்கும், புதியதாக அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய நீர்வளக் குழுமம் கடந்த மாதம் 22-ஆம் தேதி அனுமதி வழங்கியதற்கும் தமிழக சட்டப் பேரவை கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறது.
மத்திய நீர்வளக் குழுமம் வழங்கிய அனுமதியைத் திரும்பப் பெற அந்தக் குழுமத்துக்கு மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் உடனடியாக உத்தரவிட வேண்டும் என சட்டப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதி உத்தரவு மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றை மீறும் வகையில், கர்நாடக அரசோ அல்லது அதன்கீழ் இயங்கும் நிறுவனங்களோ, கர்நாடகத்தில் உள்ள காவிரிப் படுகையில், மேக்கேதாட்டு அல்லது வேறு எந்தவொரு இடத்திலும் தமிழகத்தின் ஒப்புதலின்றி எந்தவித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேறே்றி உள்ளது.
சட்டப் பேரவையில் நேற்று வியாழக்கிழமை (டிச.6) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஆங்கில மொழியாக்கப் பிரதியையும் அதுதொடர்பான கடிதத்தையும் பிரதமருக்கு அனுப்பியுள்ளார் முதல்வர்
இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் தில்லி சென்று மாலை 5.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் அவரது கூடுதல் தலைமை செயலர் ராஜகோபாலும் உடன் செல்கிறார்.
இந்த சந்திப்பின்போது மேக்கேதாட்டு விவகாரம் மற்றும் கஜா புயல் பாதிப்பால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலை உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் குறித்து நேரில் விளக்கம் அளித்து ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமருடனான சந்திப்பை முடித்து விட்டு இரவே விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...