இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

திங்களன்று கரையை கடக்கும் புயல் சின்னத்தால் 2 நாட்களுக்கு கன மழை எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக மாறி திங்கட்கிழமை ஓங்கோல் - காக்கிநாடா இடையே கரையை கடக்கும்.

News image
Updated On :15 டிசம்பர் 2018, 10:49 am

PTI


சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக மாறி திங்கட்கிழமை ஓங்கோல் - காக்கிநாடா இடையே கரையை கடக்கும்.

இதன் காரணமாக கடலோர ஆந்திரா மற்றும் வட தமிழக மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் சனிக்கிழமை முதல் தரைக் காற்று மணிக்கு 45- 55 கி.மீ. வேகத்தில் வீசும். சமயத்தில் 65 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும்.

தெற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்காக நகர்ந்து மச்சிலிப்பட்டினத்துக்கு 890 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) புயலாக மாறி, அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் (ஞாயிறு, திங்கள்) தீவிரப் புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இது மேலும் வடக்கு மற்றும் வடமேற்காக நகர்ந்து ஆந்திர மாநிலம் ஓங்கோல் - காக்கிநாடா இடையே டிசம்பர் 17ம்  தேதி பிற்பகலில் கரையை கடக்கும். இதன் காரணமாக ஆந்திர மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் மிகக் கன மழை பெய்யும். தமிழகத்தின் ஒரு சில இடங்களில் டிசம்பர் 16ம் தேதி கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

டிசம்பர் 17ம் தேதி காலை முதல் ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் மெல்ல அதிகரித்து மணிக்கு 80- 90 கி.மீ. வேகத்திலும், இது மேலும் அதிகரித்து மணிக்கு 100 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.