இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டது தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கோவையில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், சக்தி சேனா அமைப்பின் தலைவர் அன்புமாரி ஆகியோரைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக சென்னையைச் சேர்ந்த இஸ்மாயில், சலாவுதீன், ஜாபர்சித்திக், சம்சுதீன், கோவையைச் சேர்ந்த ஆஷிக் ஆகியோர் கைது கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் அளித்த தகவலின்பேரில் கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த அன்வர், பைசல் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களுக்குத் தடை செய்யப்பட்ட அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 7 பேர் மீதும் தேசிய சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க மத்திய அரசின் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் (என்ஐஏ) முடிவு செய்தனர். ஏற்கெனவே இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை தொடர்பான வழக்கையும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் விசாரித்து வரும் நிலையில், இந்த வழக்கையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இந்த வழக்குகள் தொடர்பாக விசாரிக்க கோவையில் தற்காலிக அலுவலகத்தை தேசிய புலனாய்வு முகமையினர் அமைத்துள்ளனர்.
இந்தநிலையில் இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல திட்டமிட்டதாக கோவையில் கைதான 7 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனை மேற்கொண்டுள்ளனர். கோவையில் உள்ள உக்கடம், குனியமுத்தூர், வெரைட்டி ஹால் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல் சென்னை, திண்டிவனத்திலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்லூரி மாணவா் வெட்டிக் கொலை: நண்பா் கைது

சுதந்திர தினம்: வேலூா் மாவட்டத்தில் 800 போலீஸாா் பாதுகாப்பு
உலகக் கோப்பை ஹாக்கி இன்று தொடக்கம்: ஆடவா், மகளிருக்கான 16-ஆவது போட்டி

இந்தியா - இலங்கை மோதும் காலே டெஸ்ட் இன்று தொடக்கம்
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



