தமிழகத்தில் இதுவரை 1.99 கோடி மின்னணு குடும்ப அட்டைகள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.
மாநில நுகர்வோர் பாதுகாப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அவர் பேசியது:- நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி, நுகர்வோர் நிவாரணம் பெறும் அமைப்புகள் மூன்று அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளன. ரூ.20 லட்சம் வரை நிவாரணம் கோரும் வழக்குகள் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களிலும், ரூ.20 லட்சத்துக்கு மேல் ரூ.1 கோடி வரையிலான வழக்குகள் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் மூலமாகவும், ரூ.1 கோடிக்கு மேல் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் மூலமாகவும் தீர்வு காணப்பட்டு வருகிறது.
மின்னணு குடும்ப அட்டைகள்: தமிழகத்தில் 1.87 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 3.15 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும், கோதுமையும் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன. குடும்ப அட்டைதாரர்கள் பொது விநியோகத் திட்டப் பொருள்களை பெறுவதில் வெளிப்படைத் தன்மையை உருவாக்கவும், போலி குடும்ப அட்டைகளைக் களைந்து உரியவர்களுக்கே பொருள்கள் சென்றடைவதை உறுதி செய்யவும் மின்னணு குடும்ப அட்டை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்கீழ், 1.99 கோடி அட்டைகள் அச்சிடப்பட்டு அளிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரீநியூ லாபம் 16% அதிகரிப்பு!

ஊழல் வழக்கில் முன்னாள் ஆம் ஆத்மி அமைச்சர் உள்பட 6 பேர் கைது!

ஹிமாசல் பருவமழை பாதிப்பு: 197 பேர் பலி; ரூ. 1,000 கோடி இழப்பு!

வட இந்தியாவில் கொட்டி தீர்த்த கனமழை - புகைப்படங்கள்
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



