எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நேர்மையாக செயல்படும் அனைவருக்குமே அரசியல் அழுத்தம் இருக்கும்: கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

நேர்மையாக செயல்படும் அனைவருக்குமே அரசியல் அழுத்தம் இருக்கும் என பொன்.மாணிக்கவேல் குறித்த கேள்விக்கு மக்கள் நீதி மய்யம்

News image
Updated On :20 டிசம்பர் 2018, 4:53 am

DIN


சென்னை: நேர்மையாக செயல்படும் அனைவருக்குமே அரசியல் அழுத்தம் இருக்கும் என பொன்.மாணிக்கவேல் குறித்த கேள்விக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கமல் பேசுகையில், நேர்மையான அதிகாரிகள் மீது அரசியல் அழுத்தம் இருக்கும், அதனை புறந்தள்ளிவிட்டு அதிகாரிகள் பணிபுரியவேண்டும்.  

ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும் படிப்படியாக, ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்துள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம்; வங்கி கணக்கிற்கு பணம் வந்தால் நல்லது தான்.

சீதக்காதி படத்துக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்தது பற்றிய செய்தியாளர்கள் கேள்விக்கு கமல்ஹாசன் பதிலளிக்கையில், படங்களின் மீது வழக்கு போடுவது, எனது படங்களில் இருந்து துவங்கியது என்பது வருத்தம் அளிக்கிறது. படத்தை பார்த்து விட்டு, தவறுகள் இருந்தால் பின்னர் கருத்து தெரிவிக்க முடியும் என்றவர் நாட்டில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது என்றார் கமல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.