சென்னை: அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சேவூர் ராமச்சந்திரன் நீக்கப்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் சி.வி. சண்முகம், சேவூர் சேவூர் ராமச்சந்திரன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பேராசிரியர் க. பொன்னுசாமி, விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் டாக்டர் சு. லட்சுமணன், எம்.பி. ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். அதிமுக அமைப்புச் செயலாளராகவும், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளாகவும், மாவட்டக் கழகச் செயலாளராகவும் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
அதிமுக அமைப்புச் செயலாளர் - டாக்டர் சு. லட்சுமணன் எம்.பி,. அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் - பேராசிரியர் க. பொன்னுசாமி ( முன்னாள் அமைச்சர்), ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராக - நத்தம் தொகுதி அதிமுக முன்னாள் செயலாளர் ஆர்.வி.என். கண்ணனும், துணைச் செயலாளராக விருதுநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளராக கே.சேதுராமானுஜமும் நியமிக்கப்படுகிறார்கள்.
எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பி. கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வி்ழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக சட்டம் நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராக சேவூர் ராமசந்திரனும், வடக்கு மாவட்ட செயலாளராக தூசி கே.மோகனும்,
கிருஷ்ணகிரி காவேரிப்பட்டினம் அதிமுக ஒன்றியக் கழக செயலாளர் பொறுப்பில் இருந்து பிரபாகரன் விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஏ.கிருஷ்ணன் அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட அதிமுக அவைத் தலைவர் பொறுப்பில் இருந்து அசோக்குமார் விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சைலேஷ் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து கோவிந்தராஜ் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக பாலகிருஷ்ண ரெட்டியும், கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக அசோக்குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக தொண்டர்களிடம் பெறப்படும் மனுக்களை பரிசீலிக்க 5 பேர் ரொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு உறுப்பினராக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தொண்டர்கள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









