தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

உதவி மருத்துவர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் தொடக்கம்

மாநிலத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் புதிதாக நியமிக்கப்பட உள்ள 1,884 உதவி மருத்துவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. அடுத்த

Updated On :26 டிசம்பர் 2018, 2:21 am IST


மாநிலத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் புதிதாக நியமிக்கப்பட உள்ள 1,884 உதவி மருத்துவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. அடுத்த மாதம் வரை அந்த நடவடிக்கைகள் தொடரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் மற்றும் புதிதாக உருவாக்கப்படும் இடங்களை நிரப்புவதற்காக நாட்டிலேயே முதன்முறையாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டது.
அதன் மூலமாக இதுவரை 10,933 மருத்துவர்கள், 9,533 செவிலியர்கள் மற்றும் 4,198 இதர பணியாளர்கள் என 24,664 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வரிசையில், உதவி மருத்துவர் (பொதுப் பிரிவு) நிலையில் காலியாக உள்ள 1,884 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை கடந்த செப்டம்பர் மாதத்தில் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதற்காக 10,018 பேர் விண்ணப்பித்திருந்தனர். கடந்த 9-ஆம் தேதி நடைபெற்ற எழுத்துத் தேர்வில் 9,353 பேர் (93.4 சதவீதம்) பங்கேற்றனர்.
அண்மையில் வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளின் அடிப்படையில், 2,073 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ சேவைகள் இயக்குநரக (டிஎம்எஸ்) வளாகத்தில் கடந்த 21-ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் தொடங்கின. அதில் 150 பேர் பங்கேற்றனர். 
இதையடுத்து, வரும் புதன்கிழமை, வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை (டிச. 26, 27, 28) ஜனவரி 3, 4, 7, 8, 9, 10, 11, 21, 22, 23 ஆகிய நாள்களில் மீதமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவுடன், அவர்களில் தகுதியானவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.