திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை விவரம்!

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 7 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ 72.41 ஆகவும், டீசல் விலையில் மாற்றமின்றி லிட்டருக்கு ரூ 67.38 ஆக விற்பனை

News image
Updated On :25 டிசம்பர் 2018, 8:28 am IST


சென்னையில் இன்று பெட்ரோல் விலை 7 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ 72.41 ஆகவும், டீசல் விலையில் மாற்றமின்றி லிட்டருக்கு ரூ 67.38 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் ஏற்றம் கண்டது. அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10, டீசல் விலை ரூ.80.04 என உச்சத்தை தொட்டது.

தொடர் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது. இதனைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் இறங்குமுகமாக இருந்து வந்தது.

இதனிடையே 5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் சிறிது ஏற்றமும் இறக்கமுமாக இருந்து வந்த பெட்ரோல், டீசல் விலை சில தினங்களாக எந்தவித மாற்றமின்றியும், சிறிது குறைந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது

இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலை ரூ 72.48-ல் இருந்து இன்றும் லிட்டருக்கு 7 காசுகள் குறைந்து ரூ. 72.41 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமின்றி லிட்டர் ரூ. 67.38 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.