வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

சென்னையில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை தொடர்ந்த இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப்

News image

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் கைதாகி ஆர்ப்பாட்டத்தை தொடரும் இடை நிலை ஆசிரியர்கள். 

Updated On :26 டிசம்பர் 2018, 1:16 am IST


சென்னையில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை தொடர்ந்த இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் மயக்கமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
7-ஆவது ஊதியக் குழுவில் உள்ள ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 1,000-த்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் திங்கள்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கில் தங்க வைக்கப்பட்டனர். அங்கும் ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை தொடர்ந்தது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் எழும்பூர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்தப் போராட்டம் காரணமாக ராஜரத்தினம் அரங்கில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.