பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.
பழனி மலைக்கோயிலில் செவ்வாய்க்கிழமை கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது. காலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். ரோப்கார் மூலம் மலைக்கோயிலுக்கு சென்ற அவர், சுவாமி தரிசனம் செய்த பிறகு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், இரவு பூஜையை காண உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி வந்தார். ரோப் கார் மூலம் மலைக்கோயில் வந்த அவரை கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி ஆணையர் (பொறுப்பு) செந்தில்குமார் உள்ளிட்டோர் வரவேற்று, சுவாமி தரிசனத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர். பின்னர், சாயரட்சையில் சுவாமி தரிசனம் செய்த நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு பிரசாதங்கள்
வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








