2018ம் ஆண்டின் கடைசி நாளில், 2019ம் ஆண்டை வரவேற்று, நாளை புத்தாண்டுப் பிறப்பைக் கொண்டாட உலக மக்கள் அனைவரும் தயாராகி வருகிறார்கள்.
இந்த ஆண்டில் என்னென்ன செய்தோம், அடுத்த ஆண்டில் என்னவெல்லாம் செய்யலாம், எந்த இலக்கை அடையப் போகிறோம் என்பது போன்ற பேச்சுக்களை உள்ளடக்கியதே புத்தாண்டு கொண்டாட்டம்.
மற்ற ஏனையவர்களை விட, இளசுகள் புத்தாண்டை ஒருபடி அதிகமாகவேக் கொண்டாடுவார்கள். திரையரங்கு, கடற்கரை, பூங்காக்களில் எல்லாம் இன்று காலை முதலே புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன.
சென்னையில் பாதுகாப்பான புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக ஏராளமான காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், புகழ்பெற்ற கவிஞர் வைரமுத்து புத்தாண்டு குறித்து தனது டிவிட்டரில் ஒரு கவிதையை பதிவிட்டுள்ளார்.
அதில்,
ஆண்டில் ஏது பழையதும் புதியதும்?
நம்மை நாமே புதுப்பித்துக்கொண்டால்
நாளும் புதியதாகும்.
புதுமை கொள்வோம்; போராடி வெல்வோம். வாழ்த்துக்கள்.
#2019 #HappyNewYears2019 #HappyNewYear என்று தெரிவித்துள்ளார்.
அவர் சொல்வதிலும் உண்மை இருக்கத்தானே செய்கிறது.
தினமணி இணையதள வாசகர்களுக்கு எங்களது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முறையாகப் பராமரிக்கப்படாத ஒகேனக்கல் முதலைகள் மறுவாழ்வு மையம்! மேம்படுத்தி விரிவுபடுத்த சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்!

விடுமுறை நாள்களில் சுண்ணாம்புக்கல் சுரங்கங்களுக்கு அரசுப் பள்ளி மாணவா்கள் பயணம்!

மூடப்படும் அபாயத்தில் தில்லி ரேஸ் கிளப்! எதிா்கால கவலையால் வெளியேறும் பந்தய குதிரைகள்!







