கொடைக்கானலில் இருந்து பழனி சென்று கொண்டிருந்த கார், கோம்பைக்காடு அருகே சாலையோர மலைப் பள்ளத்தில் உருண்டு விழுந்ததல் ஒருவர் பலியானார். 4 பேர் காயமடைந்தனர்.
புது வருடத்தைக் கொண்டாட திருச்சூரில் இருந்து 7 பேர் காரில் கொடைக்கானல் வந்து, அங்கிருந்து பழனிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக கார் கொடைக்கானல் - பழனி சாலையில் கோம்பைக்காடு என்ற இடத்தில் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்தது. இதில், காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு ஒருவர் மரக்கிளையில் சிக்கி பலியானார். காரில் இருந்தவர்களை மீட்புப் படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
காரில் வந்த 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பேரை மீட்கும் பணி நடந்து வருகிறது.
மலைப்பகுதியில் கார் உருண்டு விழுந்ததால் மீட்புப் பணிகளில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேஜரிவாலின் 'பி-டீம்' சிஜேபி - சுவாதி மலிவால் குற்றச்சாட்டு!

சிஜேபி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
ஈரானில் அரசுக்கு எதிராகப் போராடிய 2 பேருக்கு பொதுவெளியில் தூக்கு தண்டனை!

எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து: உயர் நீதிமன்றம்
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்



